எம்.எல்.ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்ய புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மண்டல அமமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரனை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய புகழேந்தி, டிடிவி தினகரன் பின்னால் இனி பயணிக்க முடியாது. நமது கனவு பொய்த்துவிட்டது. இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் யாரிடம் விலைபோனார் தினகரன்.
![AMMK TTV Dinakaran resigns MLA PUGALENTHI PUSH SPEECH COIMBATORE](http://image.nakkheeran.in/cdn/farfuture/4bvYThzuKc8VQsg6VXNpJAQmjznZDP4Tgn9PTVEQO1M/1570355385/sites/default/files/inline-images/admk_12_1.jpg)
வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அமமுகவின் சகாப்தம் முடிந்துவிடும். அதிமுகவிற்கோ, ஆட்சிக்கோ பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்கள் போன்று நின்று காப்பாற்றுவோம். இரட்டை இலை சின்னத்தை இழிவுப்படுத்தி டிடிவி தினகரன் பேசியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று புகழேந்தி பேசினார்.