Skip to main content

''ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன்''- சென்னை காவல் ஆணையர் பேட்டி

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 '' New operation to control rowdies '' - Chennai Police Commissioner interview

 

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன் ஒன்றை தொடங்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''சென்னையில் உள்ள ரவுடிகளை இரண்டு வகைகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஏரியா வாரியாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு எந்தவிதமான ரவுடிகள் உள்ளனர் என்பதை பொறுத்து அவர்களுக்குள் பிரச்சனை செய்துகொள்பவர்கள், அதேபோல் பொதுமக்களிடம் பிரச்சனை செய்பவர்கள் என ரவுடிகளை இரண்டு வகைகளாகப் பிரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.