Skip to main content

தென் மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெல்லைத் தேரோட்டம்....! (படங்கள்)

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

 

புகழ் வாய்ந்த நெல்லையப்பர் ஆலய ஆனித் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்க பக்தர்கள் தேரை இழுத்து வருகிறார்கள். இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், கலெக்டர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தபெற்ற சிவாலயாங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா, கடந்த 10 நாட்கள் நடைபெறும் விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

எட்டாம் திருவிழாவான நேற்று காலை நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி உள் பிரகாரம் உலா வருதலும் நண்பகலில் பச்சை சாத்தி வீதி உலாவும், மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது. கங்காளநாதர் உலாவின்போது கொட்டும் மழையிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 8.45க்கு கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் சத்தியானந்த எம்.பி., ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, அலுவலர் ரோஷினி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பித்து தேர் இழுத்தனர். தேருக்கு முன்னால் கோயில் யானை காந்திமதி, அலங்கரிக்கப்பட்டு பவனியான சென்றது. அதனைத்தொடர்ந்து நெல்லை சிவகானங்கள் சார்பில் பஞ்ச வாத்தியம், சங்கு, திருசின்னம் கொம்பு, பாணி மத்தம், ட்ரெம்பெட், உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் பழங்க 60 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். இதில் பாரதி சுழலும் படிப்பகம், இந்து ஆலய பாதுகாப்பு பக்தர்கள் பேரவை சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.

அம்பாள் தேர் காலை 9.30க்கு பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வாகையடி முனையை கடந்தது. தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேர், பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. தேர், போத்தீஸ் கார்னர் வரை இழுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் அம்பாள்தேர் இழுக்கப்பட்டு வாகையடி முனையை அடைந்தது. முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற பக்தி கோஷம் முழங்கினர். இதில் பல்லாயிரக்கண்ணாகன பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி, அம்பாள் தேர்கள் இழுத்து நிலையம் சேர்க்கப்பட்ட பின்னர் சண்டிகேஸ்வரர் தேர் கடைசியாக இழுக்கப்படுமு;. ஒரே நாளில் அனைத்து இழுக்கப்பட்டு நிலையை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆலோசனைப்படி கீழரதவீதியில் புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நான்கு ரதவீதிகள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் 1500 போலீசாரும், சாதாரண உடையில் 300 குற்றப்பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமிரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ரத வீதிகள், சுவாமி, அம்பாள் சன்னதி மற்றும் உள் பிரபகாரம், வெளி பிரகாரம், தேர் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹெலிகேமரா, கண்காணிப்பு கோபுரம் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்