உலகில் உள்ள சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனம் "பேஸ்புக்" ஆகும். உலகம் முழுவதும் சுமார் 75% மேற்பட்டோர் "பேஸ்புக்" சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வரும் "பேஸ்புக்" (Facebook) கணக்கு தொடங்கும் போது அதில் அவர்கள் தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் மாநிலத்தை குறிப்பிட வேண்டும் என்பது அதில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெறுவதை அடுத்து "பேஸ்புக்" பயன்படுத்துவோர்களுக்கு " உங்கள் மாவட்டத்தில் மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெயர்களை " கொண்ட பட்டியலைப் "பேஸ்புக் நிறுவனம்" பேஸ்புக் பயனாளர்கள் எளிதில் அறியும் வகையில் அவரவர் மாவட்ட வேட்பாளர்கள் புகைப்படத்துடன் காணும் வகையில் "பேஸ்புக்" நிறுவனம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அனைவரும் வாக்களிக்கவும் , 100% வாக்கு பதிவு இலக்கை எட்டவும் "பேஸ்புக்" நிறுவனம் இத்தகைய நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு வரும் "பேஸ்புக்" (Log in )செய்தால் அதில் (Time line) -ல் தங்களின் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என அறிய விருப்பமா ? என கேட்கும் . ஆம் என்றால் (See the candidates) என்ற Option இடம் பெற்றிருக்கும். பின்பு அந்த Option -யை கிளிக் செய்தால் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறியலாம். இந்த புதிய வசதியை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் "பேஸ்புக்" நிறுவனத்தை பாராட்டியுள்ளனர்.
பி.சந்தோஷ், சேலம் .