Skip to main content

ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த நளினி!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, "தனது தந்தையை கொலை செய்தவர்களை மன்னிப்பதாகவும் அவர்களை விடுதலை செய்ய எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு" நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை குறித்தான முடிவை தமிழக ஆளுநரே எடுக்கலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் 7 பேரின் விடுதலை குறித்தான செய்திகளும் விவாதங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அதேவேளையில் எழுத்து மூலமாக ஆங்கில தொலைக்காட்சிக்கு நளினி அளித்துள்ள பேட்டியில், தந்தையின் கொலை குற்றத்தில் குற்றம்சாட்ட பட்டவர்களை மன்னிப்பதாக தெரிவித்தும். தங்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது வாழ்க்கையில் பல்வேறு வலிமிகுந்த சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதை மறக்க விரும்புவதாகவும், தனது வாழ்க்கையை மகளுடன் கழிக்க விரும்புவதாக அதில் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்