Skip to main content

அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்.பி கதிர் ஆனந்த் ஆஜர்

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
MP Kathir Anand Ajar in the Office of Enforcement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் தற்பொழுது ஆஜராகி உள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீடு கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எம்.பி கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய ஆறு இடங்களில் சோதனை நடைபெற்றது. காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீடு, பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடங்கள் என ஆறு இடங்களில் சோதனையானது நடைபெற்றது.

சோதனையின் முடிவாக பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொறியியல் கல்லூரியில் இருந்து 13 கோடி 20 லட்சம் ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. அதேபோல் காட்பாடியில் இருக்கக்கூடிய கதிர் ஆனந்த் வீட்டின்  லாக்கரிலிருந்து 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 50க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் அமலாக்கத்துறையில் ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜரானார்.

சார்ந்த செய்திகள்