Skip to main content

தா.பாண்டியன் சொத்தை நான் அபகரிக்கவில்லை - அமைச்சர் சீனிவாசன் விளக்கம்

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
s

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சொத்து பிரச்சனை தொடர்பாக  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
.         அதில்,  அமைச்சர் சீனிவாசன்  கூறி இருப்பதாவது.‌‌..... உசிலம்பட்டியில் உள்ள தா.பாண்டியனுக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தை நான் அபகரிக்க முயற்சித்ததாக என் மீது தா. பாண்டியன் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  


இந்த பிரச்சனை தா. பாண்டியன் மற்றும் அவர் உடன் பிறந்த தம்பி டி எஸ். ராஜன் இருவருக்கும் உள்ள சொத்து பிரச்சனை ஆகும்.   டி.எஸ்.ராஜனின் மகன் ஜெபராஜன் என்னுடைய மருமகன் ஆவார்.  எனது மகளுக்கும் தா. பாண்டியன் உடன் பிறந்த தம்பி டிஎஸ் ராஜனின் மகன் ஜெபராஜுக்கும் 1995  ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் திருமணம் நடந்தது.

 

ட்

 

 தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெபரானை எனது மருமகன் என்று குறிப்பிட்டுள்ளார்.  தவிர தனது தம்பி மகன் என்று குறிப்பிடவே இல்லை. தா. பாண்டியனுக்கும் அவரது தம்பி டிஎஸ் ராஜனுக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.  மேலும் தா. பாண்டியன் தனது தம்பி டி எஸ் ராஜன் குடும்பத்தாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்  உள்நோக்கத்தோடு தவறாக இத்தனையும் நான் ஏதோ இவரது சொத்தை அபகரிப்பது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

 


 தா.  பாண்டியன் குறிப்பிடும் நிலத்தில் அவரது தம்பி டிஎஸ் ராஜனின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.  நான் எந்த ஒரு காலகட்டத்திலும் இந்த பிரச்சினைக்காக தலையிடவும் இல்லை.  யாரிடமும் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படவில்லை.  இது முழுக்க முழுக்க தா. பாண்டியனின் குடும்பத்தினர்களுக்கு இடையே உள்ள சொத்து பிரச்சனை.  இது அவரும் அவரது தம்பி குடும்பத்தாரும் நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளட்டும். 

 

எனது மருமகனுக்கு தமிழ்நாட்டையே பட்டா போட்டு கொடுக்கட்டும் என்று தா. பாண்டியன் கூறியிருக்கிறார்.  மேற்கண்ட செய்திகளை மறைத்து தரம்தாழ்த்தி விமர்சனம் செய்வது அவரது வயதுக்கும் அரசியல்முதிர்ச்சிக்கும் அழகல்ல.  என்னுடைய இத்தனை வருட அரசியல் வாழ்வில் நான் யார் சொத்துக்கும் ஆசைப் பட்டதுமில்லை அபகரித்ததும் இல்லை. இனிமேலும் எப்போதும் செய்யப் போவது மில்லை என்று தனது அறிக்கையில் வனத்துறை அமைச்சர்  சீனிவாசன் கூறியுள்ளார் .


 

சார்ந்த செய்திகள்

Next Story

’அரசின் சாதனைகளை சொன்னாலே அமோக வெற்றி பெறலாம்’-அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழிசேகர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக வனத்துறை அமைச்சரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நாகையகவுண்டன்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, ராஜதானி கோட்டை, பொன்னம்பட்டி, தர்மபுரி, அம்மாபட்டி பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கும், மாம்பழ சின்னத்திற்கும் வாக்குகள் சேகரித்தார். 

 

m

 

வாக்காள மக்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ... நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேன்மொழி சேகருக்கு இரட்டை இலை சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்திலும் வாக்களியுங்கள். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தேன்மொழிசேகர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.  ஏற்கனவே இப்பகுதி மக்களின் குறைகளை தீர்த்து வைத்தவர். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதின் மூலம் நீங்கள் எளிதாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம்.

 

 கிராமங்கள்தோறும் சிறப்பாக அரசு திட்டங்களை செயல்படுத்துவார் என்றார். பாராளுமன்ற தொகுதியில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து  விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்தவர். அவருக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் விவசாயிகளின் குறைகளை தீர்த்துவைப்பார் என்றார். மேலும் அவர், அரசின் சாதனைகளை சொன்னாலே அமோக வெற்றி பெறலாம் என்றார்.

 

தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், மாவட்ட கழகசெயலாளர் வி.மருதராஜ், திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், ஒன்றிய செயலாளர் யாகப்பன், பேரூர் கழக செயலாளர்கள் சேகர், தண்டபாணி, நிலக்கோட்டை வீட்டு வசதி கடன் சங்க தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Next Story

மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ம.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்! வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் உறுதி!!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஒட்டன்சத்திரம் அரசபிள்ளைபட்டியைச் சேர்ந்த ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அவர் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளிடம் வாழ்த்து பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனும், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் மருதராஜீம், மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் கண்னன் உட்பட பொறுப்பாளர்கள் பலரும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

 

jo

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  புரட்சித்தலைவர் அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் திண்டுக்கல் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. புரட்சித் தலைவி அம்மா பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட போது, கடந்த முறை அதிமுக வேட்பாளர் ஒரு லட்சத்து 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது வெற்றிக்கூட்டணி அமைத்திருக்கும் அதிமுகவுடன் தோழமை கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.க., உட்பட பல்வேறு கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளின் ஓட்டுக்களையும் சேர்த்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து மூன்று லட்சம் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.

 

jo

 

இதில் மாவட்ட பொருளாளரும், சிட்டிங் எம்பியுமான உதயகுமார், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்கத்தலைவர் பாரதிமுருகன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளான தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் பாலசுப்ரமணி, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நல்லாம்பட்டி பரசுராமன், திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜெ.எம்.எஸ்.இக்பால், சி.எஸ்.வெங்கடேசன், இராஜசேகரன், லெனின் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்!