Published on 18/10/2018 | Edited on 18/10/2018
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்டுகளும், இரண்டாவது பிரிவில் 6 மெகாவாட் திறன் கொண்ட ஒரு யூனிட்டும் செயல்படுகிறது.
இந்த இரண்டு பிரிவுகளில் இருந்தும் தினமும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த சில நாள்களுக்கு முன், முதல் பிரிவில் 4வது யூனிட்டில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 17, 2018) இரண்டாவது யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மின்தேவை குறைவாக உள்ள காரணத்தால் மின்சாரம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.