Skip to main content

ஒரே நாளில் 5 அடியை எட்டிய மேட்டூர் அணை!! - நீர்வரத்து குறைய வாய்ப்பு

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பொழிந்துவந்ததால் கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் 81 அடி நீர் நிறைந்தது. எனவே கபினி அணையிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு நொடிக்கு 3500 கன அடியாக இருந்தது. ஆனால் மழையளவு தற்போது குறைந்ததால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9500 கன அடியாக குறைந்தது. எனவே தற்போது கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நொடிக்கு 729 கன அடியாக குறைந்துள்ளது. 

 

dam

 

 

 

அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த 124 அடி கொள்ளளவில் 121 அடி நிறைந்துள்ளது. இந்த அணையிலிருந்தும் நீர் காவிரிக்கு திறக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நொடிக்கும் 369 கன அடி நீர் திறப்பட்டுள்ளது. எனவே இந்த நீர்வரத்தினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி  அதிகரித்து மொத்தம் 45 அடியாக உள்ளது.

 

 

 

ஆனால் தற்போது  கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கான நீர் வரத்து நொடிக்கு 1100 கன அடியாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் நீர் வரத்து குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்