திமுக தலைவர் கலைஞர் மறைந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில் அவரது சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்ட உடன்பிறப்புகள் மாஜி தலைவர் படத்தை மறந்து சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது திமுக வின் உண்மை விசுவாசிகளுக்கும் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கட்சிக்கு புதிய பொருப்பாளர்களையும் நியமித்து வருகின்றனர். அதே போல மன்னார்குடி மாஜி மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த பதவியை பார்த்து ஆனந்தமடைந்த டி ஆர் பாலுவின் ஆதரவாளர்களும் மன்னை நகர திமுக வினரும் கட்சி தலைவர் முக ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் வண்ண சுவரொட்டிகளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டியில் மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, மற்றும் திமுக வளரச்சிக்காக உழைத்த மன்னை, பூண்டி கலைச்செல்வன் முதல் பலர் படங்களுடன் ஸ்டாலின், டிஆர் பாலு, பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ மன்னை ந.செ வீரா கணேசன் உள்பட பலர் படங்கள் இருந்தாலும் கலைஞர் படம் மட்டும் காணவில்லை.
கலைஞர் படம் இல்லாத சுவரொட்டியை பார்த்த உடன் பிறப்புகள் தான் தலைவர் கலைஞர் மறைந்து சில மாதங்களுக்குள் அவரது சொந்த மாவட்டத்தில் அவரையே மறந்துவிட்டு எப்படி கட்சியை வளர்க்க முடியும் என்றும் இந்த கட்சியை வளர்க்க தலைவர் கலைஞர் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொண்ட உ பி க்கள் இந்த சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்து இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் கூறினார்கள்.