
முதல்வருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் இன்று (08.10.2023) சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் மகளிர் நலத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், “தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.