Skip to main content

வைகோ முன்னெடுத்த போராட்டம்; காப்பாற்றப்பட்ட யானைமலை; 13 ஆண்டுகளாகத் தொடரும் மாரத்தான்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

mdmk party conducted marathon in 14 years at madurai yanaimalai participated in durai vaiko

 

மதுரை மாவட்டம், யானைமலை பகுதியில் வருடந்தோறும் மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி, ‘சாதி மத எல்லைகளைக் கடந்து மனித நேயத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளில் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டியாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியை மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

 

13 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழிப்புணர்வுக்காக மதிமுக சார்பில் தொடங்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளில் நடைபெற்று வருகிறது. உலகில் பல்வேறு இடங்களில் ஒற்றைப் பாறையாலான மலைகள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவையில் ஒன்று மதுரை மாவட்டம் யானைமலை. இந்த யானைமலையில், எட்டாம் நூற்றாண்டில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட புகழ்பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. அதேபோல், ஒன்பதாம் நூற்றாண்டில் சமணர்கள்  இங்கு வந்ததற்கான ஆதாரங்களாக சமணப் படுகைகள் காணப்படுகின்றன. இப்படி இயற்கை மற்றும் வரலாற்று ரீதியாக பல்வேறு சிறப்பு பெற்ற இந்த யானைமலையை சிற்பக்கலை நகரமாக மாற்றுவதாக 13 வருடங்களுக்கு முன்பு அன்றைய அரசு அறிவித்தது.

 

அரசின் இந்த முடிவிற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையேற்று நடத்தினார். மேலும், சிற்பக்கலை நகரமாக யானைமலை அறிவிக்கப்பட்டால் அதன் விளைவு எவ்வாறாக இருக்கும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. வைகோவின் இப்படியான தொடர் போராட்டத்தை தொடர்ந்து அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியது.

 

mdmk party conducted marathon in 14 years at madurai yanaimalai participated in durai vaiko

 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் யானைமலை மீட்பை நினைவுகூறும் வகையில் மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தற்போது சமூக நல்லிணக்கம் சீர்குலைந்து வருவதை உணர்ந்து இந்த வருடம் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு ‘சாதி மத எல்லைகளைக் கடந்து மனித நேயத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளில் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

mdmk party conducted marathon in 14 years at madurai yanaimalai participated in durai vaiko

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய துரை வைகோ, “நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கும் போது நல்லவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்களை சாதி, மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கக்கூடாது. உங்களுடைய முயற்சியை ஊக்குவிப்பவர்களாக உங்களுடைய நண்பர்கள் இருக்க வேண்டும்” என்றார். இந்த மாரத்தானில் ‘மனிதம் ஏற்போம்’ என்பதே முழக்கமாக இருந்தது. இந்த மாரத்தான் போட்டி மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றிய மதிமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மரியாதை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் உடன் பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.