Skip to main content

திருநங்கையுடன் திருமணம்... வில்லங்கத்தில் எஸ்.ஐ.!

Published on 17/05/2019 | Edited on 18/05/2019

"மனைவி இருப்பதை மறைத்து, திருநங்கையான என்னை ஏமாற்றித் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த எஸ்.ஐ. இப்பொழுது ஏனோ என்னைத் தவிர்க்கின்றார். அவர் என்னுடன் இருந்த காலங்களில் அவரிடம் நகை பணம் உள்ளிட்டவற்றை இழந்துள்ளேன். அதனையும், என்னுடைய வாழ்க்கையையும் மீட்டுத் தர வேண்டுகிறேன்" என்று ஒரு வில்லங்கப் புகாரை மாவட்ட எஸ்.பியிடம் அளிக்க, வில்லங்கத்திற்கு விடைத் தெரியாமல் தவிக்கின்றது காவல்துறை.

 

Marriage with the Transgender... Complain against the police SI

 

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டிணத்தை சேர்ந்தவர் திருநங்கையான பபிதா ரோஸ்.  இவரது ’ரோஸ்’ டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களையும், சேவைகளையும் செய்து வந்தவர். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் திருநங்கைகளுக்கு எதிராக, "திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசியது சர்ச்சைக்குள்ளாக இவரது வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை அபகரித்துக் கொண்டதாக அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன் மீது மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமாரிடம் புகார் தெரிவிக்க, தற்பொழுது தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசு விசாரணை செய்து வருகின்றார்.

என்ன நடந்தது?

 

Marriage with the Transgender... Complain against the police SI

 

"திருநங்கை பபிதா ரோஸின் வீட்டில் யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அப்பொழுது அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்திக்க, இருவருக்கும் பழக்கம் உண்டானது. நாளடைவில் இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை சென்றது. மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்தே திருநங்கை பபிதா ரோஸை திருமணம் செய்தார் எஸ்.ஐ. இரண்டு வருடத்திற்கு மேலாக உள்ள இவர்களது திருமண உறவு எஸ்.ஐ. குடும்பத்தாருக்குத் தெரிய வர, அவர்களும் கண்டித்துள்ளனர். இதனால் திருநங்கையுடான சந்திப்பை அறவே தவிர்த்து புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரப்பட்ட திருநங்கை தற்பொழுது எஸ்.பியை சந்தித்து புகாரளித்துள்ளார்" என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை பபிதா ரோஸ், "இது எங்களுக்குள்ளான குடும்பச் சண்டை. இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல தீர்வை தருவதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். அப்படி ஏதாவது தேவையெனில் பத்திரிகையாளர்களை அழைத்து நடந்ததை கூறுவேன்" என்றார் அவர். எஸ்.ஐ. விஜய சண்முகநாதனைத் தொடர்புக் கொண்டோம். பதிலில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Forgery issue; The main culprit arrested

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

Forgery issue; The main culprit arrested

அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதோடு  கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேரின் உயிரிழப்பு காரணமான கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் சப்ளை செய்தவர் சிவக்குமார் ஆவார். 

Next Story

கஞ்சா விற்ற இளைஞர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Youth arrested for selling cannabis

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் பாசில் என்கிற பப்பாளி (27) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.