![Marimuthu's sensational final tik tik minutes; CCTV footage of the car driving away](http://image.nakkheeran.in/cdn/farfuture/ycJyNWZiEQ4MBPgANe1KSHB0Zljof0-CryfZj_gLKHw/1694190411/sites/default/files/inline-images/A1396.jpg)
நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாளை காலை அங்குள்ள மக்களுக்காக அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட வலி காரணமாக தானே காரை எடுத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் யாருடனோ செல்போனில் பேசியபடி வெளியே வந்த மாரிமுத்து பின்னர் காரில் ஏறி இன்டிகேட்டரை போட்டு பதற்றமில்லாமல் காரை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.