Skip to main content

   நான்கு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

மதுரை தொடங்கி திருமங்கலம் வழியாக செங்கோட்டை வரை 147 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 69 கி.மீ. தொலைவிற்கு ராஜபாளையம், சிவகிரி, வடகரை அச்சன்புதூர் வரையிலான விளை நிலங்கள், சாலைக்காகக் கையகப்படுத்துவதாக இருந்தது. இத்திட்டத்தை எதிர்த்தும் மாற்று வழியில் அமைக்கக் கோரியும், தங்களது விளை நிலங்கள் பறி போவதைக் காப்பாற்றும் வகையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

k

 

கடந்த 07ம் தேதியன்று என்.எச் 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சார்பில் அதன் தலைவர் மாடசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் குழந்தைகள் குடும்பத்தோடு தேசியக் கொடியுடன் சிவகிரி தொடங்கி உள்ளாறு பகுதி வரை தங்களது விளை நிலங்களில் நின்றபடி போராட்டம் நடத்தினார்கள்.

k

 

இந்தப் போராட்டம் தொடர்பாக ராயகிரி பாகம் – 2 வி.ஏ.ஓ. பாக்கியராஜ் சிவகிரி போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் சிவகிரி எஸ்.ஐ. துரைசிங்கம் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டத் தலைவர் மாடசாமி, செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, ஆலோசகர் ஜாஸ்பர் ஜெயராமன், நிர்வாகிகளான நமச்சிவாயம், அச்சன்புதூர் மிரான்கனி, வடகரை ரிசவுமைதீன், பெண்கள் இணைப்புக் குழு மாநில செ. பொன்னுத்தாய், மக்கள் அதிகாரம் அமைப்பின் சம்மனசு, புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் அம்மையப்பன், உள்ளார் முத்தையாபாண்டியன் சிந்தாமணி குமார். ஸ்ரீவில்லிப்புத்தூரின் மல்லிப்பகுதியின் சந்திரன், சேத்தூர் முத்துச்சாமி, ராஜபாளையம் மனோகரன் உள்ளிட்ட 18 பேர்கள் மீது, அனுமதியின்றி கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்