Skip to main content

 "உயிரே போனாலும் பரவாயில்லை; நானே சென்று பல்லக்கை சுமப்பேன்" - மதுரை ஆதீனம் பேட்டி 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Madurai Aadeenam press meet

 

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என மதுரை ஆதீனம்  ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். 

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.

 

500 ஆண்டுகளாக வராத சட்ட ஒழுங்கு பிரச்சனை இப்போது ஏன் வருகிறது. காலங்காலமாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது.இந்த நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும். பட்டினப் பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மதுரை ஆதீனத்தின் புரிதலுக்காக இந்த நினைவூட்டல்"- முரசொலியில் வெளியான கட்டுரை! 

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

"This Reminder for Understanding Madurai Athena" - Article published in Murasoli!

 

மத நம்பிக்கைகளில் தி.மு.க. அரசு தலையிடுவதில்லை என மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

 

'அத்துமீறும் மதுரை ஆதீனம் அறிவதற்கு!' என்ற தலைப்பில் முரசொலியில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் எம்மதத்தவராக இருந்தாலும், அவர்களது மத நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு தி.மு.க. செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சி ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நிகழ்வுகள் எத்தனை நடந்தன என்பது மதுரை ஆதீனத்திற்கு நினைவிருக்கும். பிரதமர் நரேந்திர மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன் என்று பூச்சாண்டிக் காட்டும் மதுரை ஆதீனத்தின் புரிதலுக்காக இதை நினைவூட்டுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், துறைச் சார்ந்த அமைச்சரும் தமிழகம் அமைதிப் பூங்காவாக அனைத்து மதத்தினரும் அண்ணன், தம்பிகளாக ஒன்றுப்பட்டு வாழ வேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதீனகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில், தொடர்ந்து பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

மதுரை ஆதீனம் இருப்பது தமிழ்நாடு! என்றும், இந்த மண்ணில் உள்ள பல சைவ ஆதீனங்கள் எந்த சலசலப்பும் இல்லாமல் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர் என்றும் முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார், பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

நீங்களாம் தளபதியைப் பத்தி தப்பா பேசலாமா? மதுரை ஆதீனத்திற்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள் 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Madurai Vijay fans condemning Madurai Aadeen talk about vijay film

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் அண்மையில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''சமீபத்தில் தொலைக்காட்சியில் படம் ஒன்றை பார்த்தேன். விஜய்னு ஒரு நடிகர் நடிச்ச படம். அதில் அந்த நடிகர் சொல்கிறார் ''புள்ளையாரே... புள்ளையாரே... உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலிக்கு சாத்துனா செடி சிரிக்குதுனு' சொல்றாரு. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படி சொல்லுவாரு. அவர் படத்தை பார்க்காதீங்க. இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கினு சொல்கிறார்கள்" என்றார். 

 

இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு ஒரு படி மேலே சென்ற மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆதீனத்துக்கு எதிராக போஸ்டர் அடுத்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "எச்சரிக்கை, மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? "வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை சீண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.