திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருபவர் ஜெயதேவ். திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருபவர் செண்பகம். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவீட்டாரும் பேசி, வரும் 20-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே வரதட்சணை குறித்து இரு வீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் இவர்கள் இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்தனர்.
வரதட்சணை பிரச்சனையில் திருமணம் நின்று விடுமோ என்கிற பயத்தில் ஜெயதேவ் விஷமருந்தி மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஏற்கனவே ஒரு கிட்னி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விஷமருந்தியதால் மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இதற்கிடையே இதற்கு இடையில் பாதுகாப்பு பணிக்கு சென்ற இடத்தில் காதல் மலர்ந்த இடமான ராமநாதபுரம் சென்றிருந்த செண்பகம், இந்த தகவலை அறிந்து எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து சக காவலர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து தனியார் மருத்துமனையில் சேர்த்து தீவிரமாக சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதலன் போலிஸ் ஜெயதேவ் மரணம் குறித்து துவாக்குடி போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.