சிவகங்கை மாவட்டத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 500 ஆடுகளுடன் சீர் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்தவர் பொன்.மணிபாஸ்கர். மாவட்ட சேர்மனான இவர் அதிமுக சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராக உள்ளார். இவரது மகள் ஹரிப்பிரியாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள ஓவியம் கார்டனில் நடந்தது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பித்தளைப்பாத்திரங்கள், குத்துவிளக்குகள் மற்றும் ஏறத்தாழ 500 ஆடுகளுடன் ஊர்வலமாக சென்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனுடன் பலகாரங்கள், பூக்கள், பூஜைப் பொருட்கள், உடைகள் என 350க்கும் மேற்பட்ட தாம்பூலத் தட்டுகளுடன் கிராம மக்கள் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.