Skip to main content

'விஜய் பேசும் வசனங்கள் செயல்படுமா என்பதை பார்ப்போம்'-வானதி சீனிவாசன் பேச்சு

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
bjp

'திரைப்படத்தில் விஜய் பேசும் வசனத்தை எல்லோருமே ரசித்ததுண்டு. இந்த வசனங்கள் எல்லாம் வரக்கூடிய காலங்களில் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து சொல்வது தான் சரியாக இருக்கும்' என பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்யார்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் மாநாட்டில் அவர் பேசிய பேச்சுக்கள் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையில், 'தமிழக வெற்றிக் கழகம் இப்பொழுதுதான் அரசியல் கட்சியாக உதயமாகி தொண்டர்கள் மத்தியில் வெளியாகி இருக்கிறது .அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியோ அவர்களுடைய கொள்கைகளைப் பற்றியோ பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதனால் விஜய் உடைய கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து அதற்குப் பின்பாக கருத்து தெரிவிப்போம்.

ஒரு அரசியல் கட்சி உதயம் என்பது மட்டுமல்ல ஒரு திரைப்பட நடிகராக இருந்தாலும் இயல்பாகவே தமிழகத்தில் கூட்டம் இருக்கிறது. செயல்பாடுகளை பார்த்து தான் மற்ற அனைத்தும். எல்லாருமே ஒவ்வொரு வகையான தியாகத்தை செய்து அதன் பிறகுதான் அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நபர் குறைவான வருமானம் வாங்குவதால் தியாகம் குறைவானது என்று அர்த்தம் இல்லை.  தியாகத்தில் பெரியது சின்னது என்பது கிடையாது. அன்றாட கூலி வேலையை விட்டுவிட்டு ஒருவர் அரசியல் சேவைக்காக பணிபுரிய வருபவர்கள் என்றால் அவர்களுடைய தியாகமும் பெரிது தான். உங்களுடைய பிசினஸ், மார்க்கெட் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வந்தால் யார் வந்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்.

அரசியல் களத்திற்கு நிறையபேர் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பாசிசம்; பாயாசம்' பிறகு டீசென்ட் அட்டாக் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. திரைப்படத்தில் அவர் பேசும் வசனத்தை எல்லோருமே ரசித்ததுண்டு. அதேபோல் இந்த வசனங்கள் எல்லாம் வரக்கூடிய காலங்களில் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்து சொல்வது தான் சரியாக இருக்கும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்