Skip to main content

4 மாதங்களாக நீதிபதிகள் இல்லாததால் வழக்கறிஞர்களும், காவலர்களும் கடும் அவதி!

Published on 08/05/2018 | Edited on 08/05/2018
ul

 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சரகத்தில் உள்ள திருவெண் ணைய்நல்லூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை , எடைக்கல் மற்றும் மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட ஆறு காவல் நிலையங்களில் பதிவு செய்யும் வழக்குகள் அனைத்தும் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தான் பிணை ஆவணம் மனு தாக்கல்  செய்து கைது , மற்றும் முன் ஜாமின் மனு தாக்கல் செய்வது வழக்கம்.

 

 இது போன்று வழக்கில் குற்றம் சாற்றப்படும் நபரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்வது வழக்கம். ஆனால் இங்கு சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் இரண்டு, குற்றவியல் நீதிமன்றம் இரண்டு என ஐந்து நீதிமன்றம் உள்ளது. இதில் சிவில் நீதிமன்றத்துக்கு ஒரே நீதிபதி மட்டும் பணியில் உள்ளார். ஆனால் குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டு  நீதிபதிகளும் இல்லை. அதனால் கடந்த 4 மாதமாக வழக்கறிஞர்களுக்கும், அந்த அந்த காவல் நிலைய போலீசார்களுக்கும் தினந்தோறும்  திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சியில் உள்ள நீதிபதிகள் தான் இன்சார்ஜ். அதனால் மேற்கண்ட நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய அவசியம் உள்ளது. இது  மட்டும் இல்லாமல் கோர்ட் ஸ்டாப் அழைத்து போகவேண்டும் என்றால் கார் வைத்தால் வருவதாக தெரிவிக்கின்றனர். அதனால் உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் அவர்களும், மாவட்ட நீதிபதி அவர்களும் உடனே உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை பணியில் அமர்த்து மாறு, வழக்கறிஞர்களும் , போலீசாரும் தங்களுக்கு பணிவண்போடு கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்