அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த தர்மயுத்தத்தின் போது, ஓ.பி.எஸுடன் நின்றவர்களில் முக்கியமானவர் கே.பி. முனுசாமி. தற்போது அவர், இ.பி.எஸ்.க்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.
அதிமுகவில் தற்போது மீண்டும் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவின் தலைமை பொறுப்பும், இரட்டை இலையும் கேள்விக்குறியாகவுள்ளது. இந்நிலையில், தனது சொந்த தொகுதியான கிருஷ்ணகிரியில் அதிமுக அலுவலகம் கட்டும் பணியை அவர் சிறப்பாக நடத்தி வருகிறாராம்.
கே.பி. முனுசாமி, ஓ.பி.எஸ்-ன் பக்கம் இருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக இருந்தவர் நாராயணசாமி. அன்றைய முதலமைச்சராக இருந்த இ.பி.எஸ். கே.பி முனுசாமிக்கு ஆதரவாக சில விஷயங்களைச் செய்துள்ளார். அதன் காரணமாக கே.பி முனுசாமி, எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அப்போது இருந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளராக முனுசாமியின் ஆதரவாளரான அசோக்குமார் நியமிக்கப்பட்டார்.
இப்படியாக அந்த மாவட்ட அரசியல் சென்றுகொண்டிருக்க, கே.பி முனுசாமி தற்போது அதிமுக அலுவலகத்தை கட்டும் பணியை தொடங்கி செயல்படுத்தி வருகிறார் என்கின்றனர் அதிமுகவினர்.