Published on 18/11/2018 | Edited on 18/11/2018

கஜா புயலால் தமிழகத்தின் கடலோரே மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 46 பேர் கஜா புயல் பாதிப்புகளில் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு நிவாரண பணிகளை அரசு முடுக்கியுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் கீழ்மலையிலுள்ள சுமார் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கொடைக்கானலில் பண்ணைக்காடு, பாச்சலூர், கேசி.பட்டி, ஆடலூர், குப்பமாபட்டி உள்ளிட்ட 40 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
40 கிராமங்களில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி, நிவாரண உதவிகளின்றி தவிப்பதாகவும். இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்வையிடவில்லை எனவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.