புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும், 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாட்களாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் கிரன்பேடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் காகங்களின் படத்தை வெளியிட்டு 'தர்ணா காகங்கள் யோகா செய்வது போல் உள்ளது...' என்றும், தர்ணாவை யோகாவுடன் ஒப்பிடலாமா... என்றும், 'நோக்கம் சரியாக இருந்தால் எல்லாம் யோகா தான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிரண்பேடியின் இந்த பதிவு முதல் அமைச்சர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டத்தை கேலி செய்வதாக உள்ளது என கருத்துக்கள் பரவி வருகிறது
அதேசமயம் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதாகவும்,மக்கள் பிரச்னை முக்கியம் என்பதால் 39 கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.