Skip to main content

விவசாயிகளுக்காக பாடுபட்டவர் கலைஞர்! - கேரள ஆளுநர் சதாசிவம்

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
kss


தமிழகத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் என கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலைஞரின் உடலுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள ஆளுநர் சதாசிவம்,

கலைஞரை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து வாழ்க்கை முன்னேற்றமடைய செய்தவர். தமிழ் மொழிக்காக அதிக பணி செய்தவர்.

விவசாயிகளுக்காக பாடுபட்டவர், இன்று தமிழகத்தில் விவசாயிகள் நல்ல நிலையில் உள்ளனர் என்றால் அதற்கு கலைஞரின் திட்டங்களும் ஒரு காரணமாகும். கலைஞரின் மறைவு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே பேரிழப்பு என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்