Skip to main content

நிபந்தனை ஜாமீனில் கருணாஸ் விடுதலை

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
k

 

முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், திருவாடானை  சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.  திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு அவர் தினமும் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக  கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 7 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.   எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதையடுத்து ஜாமீன் கோரி கருணாஸ்  எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.   இந்த வழக்கில் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.  இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டியின்போது நடைபெற்ற போராட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததால்  அவர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சார்ந்த செய்திகள்