குமாியில் மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அவதியடைந்தனா்.
மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் என்.ஆா்.எஸ் மருத்துவ கல்லூாியில் இளநிலை மருத்துவா் முகா்ஜி என்ற இளைஞா் வன்முறையாளா்களால் தாக்கபட்டு தீவிர சிகிச்சை பிாிவில் இருந்து வருகிறாா். இதை தொடா்ந்து கொல்கத்தாவில் மருத்துவா்களின் போராட்டம் வெடித்துள்ளது.
இந்தநிலையில் மேற்கு வங்க மருத்துவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தொிவித்தும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு பாதுகாப்பு கேட்டும் அதற்கு தேசிய அளவில் சட்டம் நிறைவேற்றிட வலியுறுத்தி நாடு தழுவிய மருத்துவா்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது.
இதில் குமாி மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 தனியாா் மருத்துவமனை மருத்துவா்களும் 12 அரசு மருத்துவமனை மருத்துவா்களும் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினாா்கள்.
மருத்துவா்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சையின்றி கஷ்டப்பட்டனா். மேலும் உள் நோயாளிகள் கூட தொடா் சிகிச்சையளிக்க மருத்துவா்கள் இல்லாமல் கஷ்டப்பட்டனா்.