காஞ்சிமட பீடாதிபதியான விஜயேந்திரர், சங்கர மடத்தில் அதிகம் தங்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, அவருக்கு முன்பு பீடாதிபதியாக ஜெயேந்திரர் இருந்த போது, அவர் அறைக்கு எதிர் அறையில் கம்பீரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த அன்றைய இளைய பீடாதிபதியான விஜயேந்திரர், ஜெயேந்திரரின் மரணத்துக்குப் பிறகு அந்த மடத்திலேயே தங்குவதில்லை. அவர் காஞ்சிபுரத்தில் இருந்தால் அந்த மடத்துக்கு அருகே இருக்கும் அன்னதானக் கூடத்தில்தான் தங்குகிறார் என்று கூறுகின்றனர். இல்லையென்றால் பெரும்பாலான நேரம் நங்கநல்லூர் மடம் அல்லது பெங்களூர், ஹைதராபாத் என்று தங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்று பார்த்த போது, மடத்தில் இருக்கும் ஸ்ரீராம் என்பவர், அங்குள்ள மரகத லிங்கத்தை வைத்து பூஜை செய்து விட்டு, குட்டி தேவதைகளிடம் பேசுகின்ற வழக்கம் உள்ளவர் என்கின்றனர். அப்படி ஒருமுறை பேசிய போது, அந்தக் குட்டி தேவதை, மர்மமாக மரணமடைந்த ஜெயேந்திரரின் ஆவி, இந்த சங்கர மடத்திலேயே ஆக்ரோசமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. அது சிலர் மீது கோபமாக இருக்கிறது என்று சொன்னதாக பேசப்படுகிறது. இதைக் கேட்டதில் இருந்து, மடத்தில் தங்கவே விஜயேந்திரர் தயங்குகிறார் என்று கூறிவருகின்றனர்.