Published on 11/03/2018 | Edited on 11/03/2018

ஈரோடு மாவட்டத்தில் நேற்றும், இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இன்று இரண்டாம் நாள் பயணமாக மொடக்குறிச்சி சென்றார். அங்கு அப்பகுதி மக்களிடம் சிறுது நேரம் பேசிய கமல்ஹாசன் நேராக ஈரோட்டில் உள்ள பெரியார், அண்ணா நினைவிடத்திற்கு சென்றார்.
அந்த நினைவிடத்தில் பெரியார் பயண்படுத்திய பொருட்கள், அவர் வாழ்ந்த அறைகளை தனியாக சுற்றிப் பார்த்து ஒவ்வொரு இடங்களிலும் சிறுது நேரம் செலவலித்தார். இதன் பின் பத்திரிக்கையாளர் சந்ததிப்பு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இன்று மாலை வரை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.