Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் பம்பை வாசித்த கலைஞர்கள் 

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
kalaignar


 

 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, தாமோதரன், பூபதி, குமார், ராமமூர்த்தி ஆகிய 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் கலைஞர் நினைவிடத்தில் ஐந்து நிமிடம் பம்பை வாசித்தனர்.
 

அப்போது அவர்கள் கூறியதாவது, திமுக தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது பம்பை வாசிக்கும் எங்களுக்கு கலைஞர்களுக்கான அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கினார். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது விவசாய கடன் தள்ளுபடி செய்தார். அதனால் எங்களைப் போன்றவர்கள் பயன் பெற்றார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். ஆடு, மாடு வாங்க கடனுதவி அளித்தார். 
 

 

 

நாங்கள் விவசாயிகள்தான். நகை கடன், பயிர் கடன் வாங்கிய எங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தார். கடந்த 7ஆம் தேதியே சென்னை வந்தோம். 8ஆம் தேதி ராஜாஜி அரங்கத்தில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினோம். அவர் செய்த உதவிக்கு இன்று நன்றி செலுத்தும் விதமாக அவரது நினைவிடத்தில் பம்பை வாசித்தோம் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்