Published on 19/09/2018 | Edited on 19/09/2018

கலைஞருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை அதிமுக அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார் தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ கலைஞர் நினைவிடம் குறித்து அவ்வாறு பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியது, ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அம்மாவின் பெயரைச்சொல்லி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் எனக் கூறியதால்தான் நாங்கள் அவ்வாறு கூறினோம். அம்மாவைப் பற்றி அவர்கள் பேசினால், நாங்களும் பேசுவோம். அது எங்கள் தெய்வத்தின் கோவில். அதை இடிப்போம் என சொன்னால் நாங்கள் இதைவிட கடுமையான வார்த்தைகள் கூறுவோம்.