Published on 14/11/2018 | Edited on 14/11/2018
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர். 8 அடி உயரமும், 800 கிலோ வெண்கலத்தால் ஆன இந்த சிலையை ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் உருவாக்கினார். அவைத்தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. இது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என்று அதிமுக தவிர மற்ற அனைத்து தரப்பிலும் பேசப்பட்டது. இதனால் புதிய சிலை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது.