வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார். இந்நிலையில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன் ( திமுக ) தலைமையில் நவம்பர் 26ஆம் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்தை ஆம்பூர் அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்புகள் நடத்தியுள்ளன.
அதில், ஆம்பூரை ஒரு கோட்டமாக அறிவித்து இங்கு கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். ஏன் எனில் மத்திய மாநில அரசுகளுக்கு அதிக வரி வருவாய் தரும் பகுதியாக ஆம்பூர் தாலுகா உள்ளது. அதோடு, கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க தேவையான நிலம் 20 ஏக்கர் உள்ளது. டான்சி நிறுவனத்தினர் பயன்படுத்தாமல் வைத்துள்ள 20 ஏக்கரில் கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டலாம்.
வாணியம்பாடி இ.எஸ்.ஐ மருத்துவமனையை தரம் உயர்த்தி உள்ளதைப் போல, ஆம்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இந்த மருத்துவமனையில் மட்டும் 37 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துவைத்துள்ளனர். இதனால் ஒரு லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள். இதனையும் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல், ஆம்பூர் தாலுகாவில் இதுவரை இருந்த பல கிராமங்கள், மாவட்ட எல்லை பிரிப்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் வருவதற்கு பதில், வேலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டும்மே அக்கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலூர் மாவட்டத்தோடு இணைக்கும் பட்சத்தில் வேலூர்க்கு பயணமாகி நீண்ட ஆளைச்சலை ஏற்படுத்தும்.
இந்த மூன்று கோரிக்கைகளை ஆம்பூர் மக்கள், பொதுநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாக வைக்கிறோம். இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மென முடிவு செய்தனர். அந்த முடிவினை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் தலைமையில் சென்று சந்தித்து, தங்களது கோரிக்கை கடிதத்தை தந்துவிட்டு வந்துள்ளனர்.