ஜாக்டோ ஜியோ வின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ந் தேதி முதல் தொடங்கிய போராட்டம் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் மற்ற சங்கங்களும் ஆதரவு கரம் நீட்டி வருவதால் போராட்டம் வலுவடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டத்தை தூண்டியதாக 420 பேரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து இன்று மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அணி அணியாக வந்த போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள் வளாகத்தில் குவிந்துள்ளனர். அப்போது சில போலிசார் 150 பேரை மட்டும் பெயர் பட்டியல் கொடுங்கள் அவர்களை மட்டும் கைது செய்வோம் என்று கேட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஆட்கள் குறைவு என்று காட்ட அரசு திட்டப்படி 150 பெயர்கள் மட்டும் கேட்கப்படுவதாக பலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 7030 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலைக்குள் விளக்கம் தரவில்லை என்றால் பணியிடைநீக்கம் செய்யப்டலாம் என்ற நிலை உள்ளது. அதன் பிறகே தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு அனுப்பபடுவார்கள்.