தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா காவல்துறை நிர்வாக டி.ஐ.ஜி.யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகரக் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையராக வனிதா, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக ராதிகா, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக விஜயகுமாரி, ரயில்வே ஐ.ஜி.யாக சுமித் சரண், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக ராஜேந்திரன், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நரேந்திரன் நாயர், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மகேஸ்வரி, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக சத்யப்பிரியா, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக காமினி, மயிலாப்பூர் துணை ஆணையராக திஷா மிட்டல், வடக்கு மண்டல இணை ஆணையராக லலிதா லட்சுமி, வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக சிவ பிரசாத், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக கார்த்திகேயன், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல்குமார், மாதவரம் துணை ஆணையராக சுந்தரவதனம், சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக ரூபேஷ் குமார் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.