


Published on 14/09/2021 | Edited on 14/09/2021
வைல்டு மிலன் பாப் அப், உணவு, துணி வகைகள், உதிரிப் பாகங்கள், நிலை பொருட்கள், காலணி உள்ளிட்ட சிறு வணிகம் செய்வோருக்கான பாப் அப் பொருட்காட்சியை இம்மாதம் அடையார், காந்தி நகரில் நடத்துகிறது. ஆன்லைன் தங்களில் விற்பனை செய்யும் சிறு வணிகர்களுக்கு, தங்களது பொருட்களைப் பார்வைக்கு வைக்கவும், நியாயமான விலையில் விற்கவும் வாய்ப்பாக அமையும். இந்த பொருட்காட்சியில் மகளிர் அதிக அளவில் இடம் பெறுகின்றனர். அவர்களது தயாரிப்புகளை ஊக்கப்படுத்தப் பல இடங்களில் பொருட்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. லாப நோக்கமற்ற இந்த பொருட்காட்சியால், அவர்களது வணிகம் விரிவாக்கம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.