Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சியினர்! (படங்கள்)

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

 

இன்று (2.11.2021) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பாக தமிழக பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

 

இதில், திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை மத்திய அரசு தடுக்க தவறியது என அவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், பிரதமர் மோடி பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சியினர் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இக்கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட  அனைவரையும் போலீசார் கைது செய்து செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்