சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில்
பாதுகாப்பு பணிகள் தீவிரம்..!

பாதுகாப்பு பணிகள் தீவிரம்..!

நாட்டின் 71வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாடுமுழுவதும் சுதந்திர தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் 1,200 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. அதிநவீன ஆயுதங்களை இயக்கத் தெரிந்த விரைவு அதிரடிப்படை குழுவினர் துப்பாக்கி ஏந்தியபடி விமான நிலையத்தை கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1500 ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் - எஸ்.பி.சுந்தர்