Skip to main content

திருவாரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் -பீதியில் மக்கள்

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
d

 

திருவாரூரில் பன்றிக்காயச்சல் அறிகுறியுடன் 8 மாதக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். சுகாதார சீர்கேட்டுடன் உள்ள தங்கள் பகுதியை ஆய்வு செய்து சுத்தம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் நூர்அகமிதியா தெருவை சோ்ந்தவர் அகமது குட்புதீன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார் . இவருக்கு கதிஜா என்ற மனைவியும்  8 மாத ஆண் குழந்தை  அகமது அஸ்சலாமும் உள்ளனர். இந்நிலையில் அஸ்சலாமுக்கு திடிர் என்று காயச்சல் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தை அஸ்சலாம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 

d


 குழந்தையின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றிக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தை அஸ்சலாம் திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் நிலைமை குறித்து மருத்துவர்கள் உரிய தகவல்களை தெரிவிக்காததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் குழப்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளனர். 

 

d

 

  ’’அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அடியக்கமங்கலம், தாமரை குளத்தெரு, கீழத்தெரு, நூர்முகதியா தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை தண்ணீர் தேங்கி வடியாமல் கொசு உற்பத்தியாகி வருவதாகவும், குப்பைகள், சாக்கடை என சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தற்போது இந்த பகுதி மக்களுக்கு மர்ம காயச்சல், டெங்கு, பன்றி காய்ச்சல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதன் விளைவாக தற்போது 8 மாதக்குழந்தைக்கு பன்றிக் காயச்சல் ஏற்பட்டுள்ளது.   இந்த காய்ச்சல் பரவுவதற்கு முன்பு தடுப்புப்பணைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்’’ என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தற்போது பல்வேறு  காய்ச்சல் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

        
 

சார்ந்த செய்திகள்