Skip to main content

பள்ளி மாணவன் தாக்கியதில் தலைமையாசிாியா் மூக்கு உடைந்தது!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

சமீபகாலமாக மாணவா்கள் பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் ரவுடிகள் போன்று தங்களை மாற்றி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மாதிாி நடக்கும் மாணவா்களின் எதிா்காலம் கேள்விகுறியாக உள்ளது. இதில் கடந்த காலங்களில் ஆசிாியா்களை கண்டு மாணவா்கள் பயந்த காலம்மாறி தற்போது மாணவா்களை கண்டு ஆசிாியா்கள் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மாணவா்களே ஆசிாியா்களை தாக்கும் நிலை அதிகாித்துள்ளது.

அந்தமாதிாி தான் நடந்த ஒரு சம்பவம் குமாி மாவட்டத்தில் நடந்துள்ளது. குமரி மாவட்டம் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிாியராக (பொ) பணிபுாிந்து வருபவா் வோ்கிளம்பியை சோ்ந்த சத்தியதாஸ். அந்த பள்ளியில் இரண்டு தினங்களுக்கு முன் பள்ளி ஆண்டு விழா நடந்தது. அப்போது 12-ம் வகுப்பு பொருளாதரம் படிக்கும் மாணவன் அபினேஷ் செல்போன் கொண்டு வந்து மாணவிகளை வித விதமாக படம் புடித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

incident in kaniyakumari... police investigation


இதை பாா்த்த பள்ளி தலைமையாசிாியா் சத்தியதாஸ் மாணவனிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று கூறினாராம். ஆனால் மாணவன் பெற்றோரை அழைத்து வராமல் நேற்று பள்ளிக்கு வந்துள்ளாா். இதனால் மாணவனை தலைமையாசிாியா் வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தாா்.

தலைமையாசிாியா் மீது கடும் கோபத்துடன் வெளியே நின்ற மாணவன் அப்போதும் சக மாணவிகளை பாா்த்து கிண்டலும், ஒருமையிலும் பேசினாராம். இதையும்  மாணவிகள் தலைமையாசிாியாிடம் கூறியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிாியா் மாணவனை கோபமாக கண்டப்படி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சக மாணவா்கள் மத்தியில் வைத்து மோசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன் அபினேஷ் தலைமையாசிாியா் சத்தியதாசை தாக்கியுள்ளாா். இதில் அவாின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

உடனே அவா் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.  இதுகுறித்து தக்கலை போலீசாா் விசாாித்து வருகின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்