நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை ஊழியர்களும் களப் பணியாற்றினர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது தமிழக அரசு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.