Skip to main content

'நடந்தால்... தும்மினால் கூட பெர்மிஷனா'?- சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விஜயதாரணி ஆவேசம்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

If it happens ... even if you sneeze, permission- Vijayatharani MLA is angry in the assembly!

 

நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி பேசுகையில், ''வனம் சார்ந்த பகுதிகள் என்று பார்க்கும்பொழுது நிலங்கள் தான் அதிகமாக இருக்கிறது. வனம் சார்ந்த பகுதிகள் என்று பார்க்கும் பொழுது எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வனமும், மலை சார்ந்த பகுதிகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல் கடல் சார்ந்த பகுதிகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சூழலியல் பாதுகாப்பு மண்டலம் முதலில் பத்து கிலோமீட்டர் என்றார்கள் பிறகு மூன்று கிலோமீட்டர் என்றார்கள். மக்கள் வாழக்கூடிய பகுதிகள் தான் 'இன் ஹாபிட்டேட் ஏரியா'. ஆனால் சூழல் பாதுகாப்பு தாங்கும் மண்டலம் என்று சொல்லி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் செயல்பாடுகளைதான் செய்து வருகிறார்கள். இதில் எந்த வகையிலும் காடு பாதுகாப்பு வரவே வராது.

 

குறிப்பாக சூழல் பாதுகாப்பு மண்டலம் என்பது ரிசர்வ்ர்டு பாரஸ்ட். காடுகளில் வெளியில் வாழக்கூடிய மக்களை எல்லாவற்றுக்கும் நடந்தால்... தும்மினால்... திரும்பினால்... எல்லாத்துக்கும் பர்மிஷன் கேட்க வேண்டும் என்ற சூழ்நிலையை மத்திய அரசு சட்டத்தின் வாயிலாக கொண்டு வருகிறது. அதற்கான அழுத்தத்தை மாநிலங்களுக்குக் கொடுக்கிறது. இப்பொழுது மூன்று கிலோமீட்டர் என்று நிர்ணயம் செய்து வைத்திருப்பதையும் ஜீரோ கிலோமீட்டர் என மாற்றக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்