
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழக பாஜக தலைமையோ கூட்டணி முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடத் தலைமைதான் அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, இன்னும் நான்கைந்து நாட்களில் இது தொடர்பான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிடும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, "பாஜக மேலிடம் முடிவு செய்தால் தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவேன். கூட்டணிக் குழப்பத்தை ஏற்படுத்த யாரோ பாஜக வேட்பாளர் பட்டியல் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை" என்றார்.