Skip to main content

எனக்கு மெட்டி போட்டு என் கையாலேயே வீடியோவை எடுக்க வைச்சான்: நிலானி பேட்டி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nilani nila



தன்னிடம் பழகிய உதவி இயக்குநர் காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக சின்னத்திரை நடிகை நிலானி கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். 


 
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்ட காநதி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இந்த நிலையில் நிலானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 
 

தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு போன் பண்ணிய காந்தி லலித்குமார், என்னை அவாயிட் பண்ற, நான் தற்கொலை செய்து கொள்ளப்போறேன் என்றார். அன்னைக்கு பூரா நான் போனை எடுக்கல. அன்று மாலை அவரோட நண்பரிடம் இருந்து போன் வந்தது. மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று போன் வந்தது. அவரோட டூம்மெட் ராம் என்பவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கே.எம்.சி.யில் அட்மிட் பண்ணியிருக்கிறார். 
 

ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஓடினேன். என்னோட பெயர் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஓடினேன். அங்கேயும் அட்வைஸ் பண்ணிப் பார்த்தேன். திருந்தவில்லை. திரும்பவும் எனது போனுக்கு வந்து, ஓ.கே. நிலானி லாஸ்டா நமக்குள்ள ஒரே ஒரு விசயம் பேசி முடிவு பண்ணிக்கொள்ளலாம். ஒரே ஒரு நாள் நான் ஆசைப்படுகிற மாதிரி நீ இருந்துட்டன்னா உன்னைவிட்டு நான் போயிடுறேன்னு சொன்னான். என் தலையில் அடித்து சத்தியம் பண்ணினான். 
 

நீ ஆசைப்படுகிற மாதிரியின்னா எப்படி என்று கேட்டேன். கடைசியா மயிலாப்பூரில் பஸ்ஸில் நடந்த விசயம். நீங்களெல்லாம் வீடியோவில் மெட்டி போடுகிற விசயத்தை பார்த்திருப்பீங்க. என்னை பிளாக்மெயில் பண்ணி கடைசியா உன் காலில் மெட்டி போட்டுவிட்டு போயிடுறேன்னு சொல்லி அப்புறம் நான் மீட் பண்ண மாட்டேன் என்று சொன்னான். இந்த ஒரு விசயத்தை சம்மதிச்சிக்கோன்னு சொன்னாங்க. 
 

சரி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவ்வளவு சைக்கோவா இருக்கிறவன் என் குழந்தைகளை ஏதாவது பண்ணிடுவானோன்னு பயந்து, அதற்கு சம்மதிச்சேன். எனக்கு அன்னைக்கு மெட்டிய போட்டு என் கையாலேயே அந்த வீடியோவை எடுக்க வைச்சான். என் கூட அன்னைக்கு தூங்கியே ஆவேன்னு சொல்லி கட்டாயப்படுத்தி போட்டோவையும் எடுத்து அவன் வைச்சிக்கிட்டான். 
 

சரி இதோட விட்டுருவான்னு நினைச்சா... விடல... அதற்கு அப்புறமாதான் எனக்கு பிரச்சனை அதிகமாயிடுச்சி... இந்த எவிடன்சை வைச்சே உன்னை கல்யாணம் பண்ணியே ஆவேன்னு நாலு, ஐந்து நாளா பெட்ரோல் பாட்டிலோட சுத்திக்கிட்டிருந்தான். 
 

எனக்கு போன் பண்ணி வெளியே வா, என்னுக்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா, இல்லன்னா நான் பெட்ரோல் ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேன் என மிரட்ட ஆரம்பிச்சான். நான் ரொம்ப பயந்துபோய் இருந்தேன். 
 

ஒரு கட்டத்தில், உன் குழந்தைகளுக்காகத்தானே என்னை வேணாமுன்னு சொல்ற, உன் குழந்தைகளை நான் கொன்னுட்டா நீ என்ன பண்ணுவ. நீயும் செய்துபோயிடு.. குழந்தைகளும் செத்துபோயிடட்டும், நானும் செய்து போயிடுறேன்னு சொன்னான். மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு போவதற்கு முதல் நாளு இதே பிளாக் மெயில்தான். 
 

மயிலாப்பூரில் நான் ஷீட்டிங்கில் இருந்தேன். எனக்கு போன் பண்ணி 10 நிமிசம் கெடு. நீ வெளியே வல்லன்னா பெட்ரோல ஊத்திப்பேன். 9 நிமிசம், 8 நிமிசம் என கவுண்டவுடன் கொடுத்தான் எனக்கு. எனக்கு தாங்க முடியாம மன உளைச்சலில், குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி வெளியே ஒடி வந்து போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் புகுந்தேன். 
 

என்னை டார்ச்சர் பண்றான். என்னை காப்பாத்துங்கன்னு புகார் கொடுத்தேன். இந்த புகாரை நீங்க போய் பாருங்க. இதில் எங்கேயாவது அவன் மனைவி என்று சொல்லியிருக்கானான்னு. நண்பர்களாகத்தான் பழகினோம் என்று சொல்லியிருக்கான். எனக்கு அவுங்கள ரொம்ப பிடிக்கும். அதனாலதான் அப்படி கேட்கிறேன்னு எழுதி கொடுத்திருக்கான். இனிமே அவுங்கள டார்ச்சர் செய்ய மாட்டேன். பாலோப் பண்ண மாட்டேன்னு எழுதி கொடுத்திருக்காங்க. 
 

அதற்கு அப்புறம் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு மெசேஜ் பண்ணிக்கொண்டிருந்தான். நான் ரிப்ளே பண்ணவில்லை. ஒரு போன் காலை மட்டும் அட்டன் பண்ணினேன். அப்போது பேசிய அவன், இனி நான் நல்லவனாக வாழ்கிறேன். நான் பொம்பள பொறிக்கிதான். எனக்கு ஒருசந்தர்ப்பம் கொடு என்றான். நான் வேண்டவே வேண்டாம் என்றேன். அவ்வளவுதான் நடந்தது. இவ்வாறு கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்