"குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் நடந்த பிரச்சனைக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். பஞ்சாயத்துப் பேசுவதாக ஆரம்பித்து இன்ஸ்பெக்டர் என் மனைவியை அபகரித்துக் கொண்டார். ஆகவே, இன்ஸ்பெக்டர் பிடியிலிருக்கும் என்னுடைய மனைவியை எப்படியாவது மீட்டுத்தாருங்கள்." என முதல்வர், தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. தொடங்கி மாவட்ட எஸ்.பி.வரை புகாரை அனுப்பி உயிர் பயத்துடன் காத்திருக்கின்றார் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்ற அக்கடிதமோ, "நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள பைப்பொழில் கிராமத்தினை சேர்ந்த எனக்கு, அருகிலுள்ள புளியரை தாட்கோ காலணிப்பகுதியினை சேர்ந்த பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். எங்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. நான் பணிபுரியும் பணி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் வசித்து வந்தேன்.
கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கும், என்னுடைய மனைவிக்கும் தகராறு வர, ரோட்டில் நின்று வாக்கு வாதம் செய்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த அவசரப் போலீஸ் 100 எங்கள் இருவரையும் கண்டித்ததோடு மட்டுமில்லாமல், காலையில் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கூறியதால் மறுநாள் நானும் எனது மனைவியும் மேல்மருவத்தூர் காவல் நிலையம் சென்றோம்.
அப்பொழுது அங்குப் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், எங்கள் இருவரையும் தனித்தனியாக விசாரித்து விட்டு, புறப்படும்போது எனது மனைவியின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டும், அவருடைய செல்போனைக் கொடுத்தும் அனுப்பினார். வழக்கம் போல் தான் அடுத்த நாட்களும் கழிந்தன.
இந்நிலையில், தினசரி பல நேரங்களில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பாள். அதனை நான் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் அவளுக்குத் தெரியாமல் அவளுடைய போனை எடுத்துப் பார்க்கும் பொழுது, எங்களுக்கு பஞ்சாயத்துப் பேசிய மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் அவருடைய 94981 05098 மற்றும் 94434 66366 எனும் எண்ணிலிருந்து தொடர்ந்து பேசியது தெரிய வந்தது.
எனக்கு உடம்பு சரியில்லை... சுடு தண்ணீர் வைக்க வா... தைலம் தேய்து விட வா... என கொஞ்சும் மொழியில் குறுஞ்செய்திகளையும் அவர் அனுப்பி இருப்பதும் எனக்குத் தெரியவர என்னுடைய மனைவியிடம் இதுப் பற்றி கேட்டேன். இன்ஸ்பெக்டரும், எனது மனைவியும் சேர்ந்து கொண்டு, "பேசாமல் இருக்கனும். இல்லைன்னா ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் எனவும், என்னுடைய வேலையை காலி செய்துவிடுவேன் எனவும் மிரட்டுகின்றனர்.
என்னுடைய குழந்தைகாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்து, எனது மனைவியை மீட்டுத்தாருங்கள். தயவு செய்து என்னுடைய பெயரை வெளியிட வேண்டாம். இது தெரிந்தாலே என்னையும், என்னுடைய குழந்தையையும் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து எனது மனைவி கொன்றுவிடுவாள்." என்கிறது அந்தக் கடிதம். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறந்து என்பது தற்பொழுதைய ஹாட் டாபிக்கே..!!