Published on 28/07/2020 | Edited on 28/07/2020
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்ட விதிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகருமான கார்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நாட்டின் சுற்றுச் சூழலுக்கும் மேலும் அச்சுறுத்தல் தரும். மரங்கள், விளைநிலங்கள், இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பது நிச்சயம் வளர்ச்சி அல்ல. வரும்கால சந்ததியினரின் வாழக்கையை நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அவசரம் ஏன்? பாதிப்புகளைப் பற்றி மக்கள் பேசவே முடியாது என்பது எப்படி நியாயமான ஒரு சட்டமாக இருக்கும் என நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.