Skip to main content

“இ.பி.எஸ். மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை” - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
High Court order There is no bar to investigate the case against EPS

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அப்பொழுது அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் குறித்த பல்வேறு விவரங்களை மறைத்ததாகவும் தவறான தகவல்களைக் கொடுத்ததாகவும், இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ‘தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'எடப்பாடி பழனிசாமி புகார் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்தக் கூடாது' என உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வேல்முருகன் சார்பில் இறுதி விசாரணை அன்மையில் நடைபெற்றது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த வழக்கின் புகார்தாரரான மிலானி எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டாரோ அல்ல. எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. அதற்கு காவல்துறை சார்பில் வாதிடுகையில், “சேலம் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே எனவே விசாரணைக்குத் தடை விதிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் இன்று (22.01.2025) பிறப்பித்துள்ள உத்தரவில், “எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்படுகிறது. எனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம். இந்த விசாரணைக்கு எடப்பாடி பழனிச்சாமி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதோடு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து தரப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்