Published on 24/10/2018 | Edited on 24/10/2018

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த உத்தரவை சரியாக செயல்படுத்தவில்லை, பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள்மீது எடுத்த நடவடிக்கை அறிக்கையில் இல்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்கு வாகனத்தில் பின்னால் உள்ளவர் ஹெல்மெட் அணிவதை படிப்படியாகத்தான் நடமுறைப்படுத்தமுடியும், இருவரும் ஹெல்மெட் அணிவது பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.