வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அறிவிப்பின்படி, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் தொண்டியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.