Skip to main content

நெல்லையில் தலைவர்கள் படம் உடைப்பு - இருபிரிவினரிடையே கடும் மோதல்!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
nellai


 

 

நெல்லை மேலப்பாளையம் அருகே கருப்பந்துறையில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த, சமுதாய தலைவர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ள பீடத்தின் கண்ணாடி செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

கருப்பந்துறை சாலையோரம் சமுதாய தலைவர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ள பீடம் உள்ளது. அதைச் சுற்றிலும் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பீடத்தில் இருந்த கண்ணாடி கூண்டை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள இருபிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.

இதையடுத்து போலீஸாரிடம் ஒரு பிரிவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரின் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் சாலையோரம் திரண்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்ததையடுத்து, மாநகர் காவல் உதவி ஆணையர் கிருஷ்ணசாமி தலைமையில், நெல்லை, பாளையங்கோட்டை பகுதி காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் 50-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்