புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது போலீசாருடன், எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஐகோர்ட்டையும், போலீசாரையும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச்.ராஜா விமர்சனம் செய்தார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்ததாக எச்.ராஜாவுக்கு பல்வேறு தரப்பினம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் 01.10.2018 திங்கள்கிழமை சென்னை அடையாரில் உள்ள சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்ததாக எச்.ராஜா பேசிய பேச்சு, ஒரு ‘வெர்சனில்’ இல்லை, இன்னொரு ‘வெர்சனில்’ இருக்கிறது. அந்த ஆடியோ ‘டேப்’ வெளிநாட்டில் நவீன தொழில்நுட்ப வழியாக ‘எடிட்’ செய்து மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தடயவியல் துறைக்கு உள்ளது. தவிர இது எச்.ராஜா பிரச்சனை. அதை அவரே சரி செய்வார். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.